யாழில் இளைஞனை தாக்கிய போதை ஆசாமிக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணத்தில் பலர் பார்த்திருக்க போதை ஆசாமி ஒருவர், இளைஞன் மீது தாக்குதல் நடாத்தி, ஒரு தொகை பணத்தை அபகரித்தமை தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் , தாக்குதலாளியான போதை ஆசாமியை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்வியங்காடு சந்தைக்கு அண்மித்த பகுதியில் உள்ள மதுபான சாலை வாசலில் நேற்றைய தினம் சனிக்கிழமை நிறை போதையில் நின்ற நபர் , எதிரே உள்ள வங்கி ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வருவோரிடம் மிரட்டி பணம் பெற்று வந்துள்ளார்.

கைக்கலப்பு
அதன்போது பணம் எடுத்து வந்த இளைஞன் ஒருவரிடமும் பணம் கேட்ட போது, இளைஞன் பணம் கொடுக்க மறுத்த போது, இளைஞனுடன் தர்க்கப்பட்டுள்ளார்.
இளைஞனும் தர்க்கப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையில் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்போது இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கிய போதையில் நின்ற நபர், இளைஞனிடம் இருந்து ஒரு தொகை பணத்தினையும் அபகரித்துள்ளார்.