கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் மனைவிக்கு கணவன் நிகழ்த்திய கொடூரம் ; வாழைத்தோட்டத்தில் காத்திருந்த ஷாக்
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையோரத்தில் உள்ள வாழைத்தோட்டத்தில் நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இறந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், சமீபத்தில் காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்கள் மற்றும் சுரண்டை, சுந்தரபாண்டியபுரம் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

வாக்குவாதம்
குறித்த பெண் கடையநல்லூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஒருவருக்கும் நீண்டகாலமாக தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கணவர் முருகன், அதனை கைவிடுமாறு மனைவியிடம் பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை எனத் தெரிகிறது.
இதற்கிடையில் தங்கும் விடுதிக்கு வந்துள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், குறித்த பெண்ணை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் கொலையை மறைக்கும் நோக்கில், இரவு நேரத்தில் பெண்ணின் உடலை எடுத்து சென்று சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையோர வாழைத்தோட்டத்தில் வைத்து தீயிட்டுக் கொளுத்தியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.