கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம் ; தீவிரமாகும் மீட்பு பணி
மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறுச பல்லிய பகுதிக்கு அருகாமையிலுள்ள சிலாபம் கடற்பகுதியில் நேற்று சனிக்கிழமை (12) நீராடச் சென்ற இளைஞன் ஒருவன் கடலில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலதிக விசாரணை
குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே கடலில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.
தனது நண்பர்களுடன் இணைந்து கடலில் நீராடச் சென்றபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல்போன இளைஞனைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.