சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான், அந்நபர் நல்ல செழிப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்.

சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என பார்ப்போம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய ஆசைகள் மனதில் எழும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலை வலுவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்

துலாம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். மேலும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். கலை, ஊடகம், ஃபேஷன் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இன்று முதல் மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சுக்கிரனின் அருளால் சொத்துக்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் சுக்கிரனின் அருளால் நிறைவேறும்.
