பொருளாதாரக் கொள்கை உரையாடல் தொடர்பில் ஜப்பானுடன் புதிய உடன்படிக்கை
இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் நீண்டகால ஒத்துழைப்பை உறுதிப்படுத்த பொருளாதார கொள்கை உரையாடல் (Economic Policy Dialogue) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இருதரப்பு பொருளாதாரக் கொடுக்கல் வாங்கல்களுக்கு மேலதிகமாக ஆசிய பிராந்தியத்தில் பொருளாதார ரீதியாகத் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள இந்த ஒப்பந்தம் இலங்கைக்கு உதவும்.

அந்த வகையில், இரு நாடுகளுக்கிடையில் விரிவான தொடர்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் வணிகம், முதலீடு மற்றும் பொருளாதார அபிவிருத்தி மேம்பாடு மற்றும் வலுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக பொருளாதாரக் கொள்கை உரையாடல் தொடர்பாக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு வணிக, வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.