சுக்கிர பெயர்ச்சியால் எதிர்ப்பாராத ராஜயோகத்தை சந்திக்கவுள்ள ராசிக்காரர்கள் இவர்கள்தான்
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நடக்கும் நிலையில், ராஜயோகத்தை அடையும் ராசியினரை குறித்து தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தின் படி, சுக்கிரன் மிகவும் சுப கிரகமாகும் இந்த கிரகத்தில் செல்வம், ஆடம்பரம், அன்பு, அழகு, போன்றவையை அள்ளித் தரும் கிரகமாகவும் கருதப்படுகிறார்.
பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் அரசனைப் போல வாழ்க்கையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதாயம் கிடைக்கும். அனைத்தும் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாகும். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி நல்ல சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் இதுவரை இருந்த குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் குறையும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனுடன், பயணத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும், இதனால் நன்மை உண்டாகும். தொழிலில் லாபம் உண்டாகும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் லாபம் உண்டாகும். திருமணம் நடக்கலாம். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் பலன் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பல்வேறு துறைகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை வலுவடையலாம். பணி இடத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். வணிகத் துறையில் ஒரு பெரிய வாய்ப்பைப் பெறலாம். புதிய வழியில் வருமானம் பெறுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். திருமணம் நிச்சயிக்கப்படலாம். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் சாதகமாக பலன் கிடைக்கும். வேலை மற்றும் வணிகம் இரண்டிலும் பலன் கிடைக்கும். பதவி உயர்வு பெறலாம். பொருளாதார நிலை மேம்படும். இதனால் வருமானமும் உயரலாம். நிதி சிக்கல்களைத் தீர்க்கலாம். வெளியில் சிக்கியிருந்த பணத்தை நீங்கள் திரும்பப் பெறலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.