தமிழர் பகுதியில் ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியருக்கு எமனான மின்சாரம்
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் பொழுதுபோக்கிற்காக கட்டப்பட்ட இடமொன்றில் வைத்து ஒருவர் மீது மின்சாரம் தாக்கிய நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
68 வயதுடைய ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீரென பாய்ந்த மின்சாரம்
சம்மாந்துறைப் பகுதியில் உள்ள செந்நெல் கிராமத்தில் குறித்த நபர் பொழுது போக்கிற்காக கட்டப்பட்ட இடத்தை வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதுடன் சிலர் முன்பதிவு செய்து எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் முன்பதிவு ஒன்றை கருத்திற்கொண்டு அவ்விடத்தில் சீரற்றிருந்த மின்சாரத்தை சீர் செய்வதற்காக குறித்த நபர் அங்கு சென்றிருந்தார்.
இதன் போது ஏணியொன்றை பயன்படுத்தி மின்குமிழ் ஒன்றினை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. இச் சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.