திடீர் சோதனையில் மூதாட்டி உட்பட இருவர் கைது ; சோதனையில் மீட்கப்பட்ட பொருட்கள்
நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின்போது சட்டவிரோத மதுபானங்களுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுரவை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட க்லோவியஸ் மாவத்தை பகுதியில் வலானை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத 75 லீட்டர் மதுபானத்துடன் 75 வயதுடைய மொரட்டுவை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், கொச்சிக்கடை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பலபாதுரய பகுதியில் நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது சட்டவிரோத 56 லீட்டர் 250 மி.லீ மதுபானத்துடன் 51 வயதுடைய கொச்சிக்கடையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.