உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தீர்ப்பு இன்று; நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள்
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கு தற்போது நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, கொலை மற்றும் கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மாஅதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு இன்று (22) வழங்கப்படவுள்ள நிலையில், நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகள் இன்று காலை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில், நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் நீதிபதி இராமநாதன் கண்ணன் உள்ளிட்ட மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட ஆயத்தினால் இன்று (22) அறிவிக்கப்பட உள்ளது.
இதனையொட்டி, நீதிமன்ற வளாகத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.