அனோஜனை காப்பாற்ற சவூதிக்கு புறப்படும் ஜனாதிபதி சட்டத்தரணிகள் !
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் விவகாரம் தொடர்பில் ஆராய ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரபெரும, பைஸர் முஸ்தபா ஆகியோர் தமது சொந்த செலவில் சவூதி அரேபியாவுக்கு செல்லவுள்ளனர்.
அத்துடன் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார். இந்த விடயத்தைத் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இன்றைய தினம் (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன் சமூக ஊடகப் பதிவு தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவின் விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காக, நாடாளுமன்றத் தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது.
பிரதி சபாநாயகர் மருத்துவர் ரிஸ்வி சாலிக் தலைமையிலான இந்தத் தூதுக்குழுவில், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அனோஜனை காப்பாற்ற யாழில் போராட்டம்
அனோஜனை விடுதலை செய்யக் கோரி நல்லூரில் போராட்டம்!