விஜய்யின் ஆளுமையைத் தமிழ் சினிமா நிச்சயம் இழக்கும் ; நாமலின் நெகிழ்ச்சிப் பதிவு
நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவரைப் பாராட்டி நெகிழ்ச்சியான வாழ்த்து ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் ; 33 வருட அனுபவத்திற்குப் பிறகு விஜயின் அதிர்ச்சி அறிவிப்பு
தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, விஜய்யை தனது விருப்பத்திற்குரிய கலைஞர்களில் ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவில்: "தளபதி விஜய் எப்போதும் எனக்குப் பிடித்தமான கலைஞர்களில் ஒருவர். சினிமாவில் அவரது பயணமும், வெள்ளித்திரையில் அவர் வெளிப்படுத்திய அந்தத் துடிப்பான ஆற்றலும் மிகவும் சிறப்பானது மற்றும் மறக்க முடியாதது."

"அவர் தனது வாழ்வின் இந்த அத்தியாயத்தை (சினிமா) நிறைவு செய்துவிட்டு, ஒரு புதிய பயணத்தை (அரசியல்) நோக்கி எடுத்து வைக்கும் இந்த வேளையில், சினிமா உலகம் அவரது துடிப்பையும் ஆளுமையையும் நிச்சயம் மிஸ் செய்யும்."
"அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக அரசியலில் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கி தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அண்டை நாடான இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான நாமல் ராஜபக்ச இவ்வாறு வாழ்த்துத் தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.