இந்தியாவில் துறவற வாழ்க்கையை வாழ்ந்து வரும் இலங்கை எம்.பி மற்றும் மகன்!
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் அவரது மகனும் தற்காலிக துறவற வாழ்கைக்கு பிரவேசித்துள்ளனர்.
குறித்த இருவரும், இந்தியாவின் வாரணாசியில் உள்ள இசிபத்தனாராம மூல கந்தகுடி விகாரையில் தற்காலிக துறவற வாழ்க்கைக்கு இன்றையதினம் (20-02-2024) பிரவேசித்துள்ளனர்.
குணதிலக்க ராஜபக்ஷ, ஹரிஸ்பத்வே தம்மரதன என்ற பெயரிலும், வணக்கத்துக்குரிய ரத்மலே சுமித் ஆனந்த மற்றும் வணக்கத்துக்குரிய தெஹியத்தகண்டி பியானந்த ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் கனடாவில், வசிக்கும் பொறியியலாளர் சந்தகலும் ராஜபக்ஷ, அம்பாறை தம்மாலோக என்ற பெயரிலும் தற்காலிகமாக துறவற வாழ்க்கைக்குள் பிரவேசித்துள்ளனர்.
குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் அவரது மகனும் இந்தியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இசிபதனாராம ஆலயத்தில் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எம்.பி குணதிலக்க ராஜபக்ஷ தனது மனைவியின் இறப்புக்கு பின்னர் துறவறம் நுழைய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.