நாடாளுமன்ற அமர்வில் பதற்றமடைந்த வேலுகுமார்! அமைச்சர் ஜீவன் செய்த செயல்
நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென குழப்பமடைந்த வேலுகுமாரை ரிலாக்ஸ் மிஸ்டர் வேலுகுமார் என தெரிவித்தது அங்கு சற்று நகைச்சுவை ஏற்படுத்தியுள்ளது.
இன்றையதினம் (20-02-2024) நாடாளுமன்ற அமர்வின் போது தோட்டத்தில் வேலை செய்தால் வீடு என்று இல்லாமல் தோட்டத்தில் பிறந்தாலே வீடு என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் ஜீவன் பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் குழம்பிய வேலுகுமார், வீட்டுத்தித்திட்டம் ஆரம்பித்ததை வரவேற்கின்றோம்.
அதேவேளை அந்த வீட்டு திட்டத்தை உங்களுடைய கட்சி உறுப்பினர்களுக்கு கொடுத்தீர்களா இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது.
ஆனால் அது குறித்து பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியாமல் இருப்பது எங்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னர் குழப்பமடைந்த அவரை "ரிலாக்ஸ் மிஸ்டர் வேலுகுமார்" என ஜீவன் தொண்டமான் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.