உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம் ; தெற்காசியவில் படைத்த சாதனை
பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (Institute for Economics & Peace), 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்த உலக அமைதிக் குறியீட்டு (GPI) அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் கடந்த 2025ஆம் ஆண்டுக்கான உலக அமைதிச் சுட்டெண்ணில் 97ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இம்முறை 30 இடங்கள் முன்னேறி உலகளவில் 67ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் ஒட்டுமொத்த அமைதி நிலைமை 2.3 சதவீதம் முன்னேற்றமடைந்துள்ளது.

மிகப்பெரிய முன்னேற்றம்
குறித்த அறிக்கையின் படி தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதி குறியீட்டு நிலைமையில் இலங்கை மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், தெற்காசியவில் பூட்டானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிஅமைதியான நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நேர்மறையான வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக ஐநாவின் அமைதிப்படைக்கான நிதியுதவி குறிகாட்டியில் 40.8 சதவீத பாரிய வளர்ச்சி மற்றும் அரசியல் ஸ்திரமின்மை 25 சதவீதம் குறைந்ததன் பின்னணியில், இந்தத் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உலக அமைதிச் சுட்டெண் முதன்முதலில் வெளியிடப்பட்ட 2008ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது 119 நாடுகள் தங்களது அமைதி நிலையை இழந்துள்ளததாகவும் நாடுகளிடையே இடம்பெறுகின்ற மோதலே இதற்கான பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.