ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் கத்தோலிக்க தேவாலயங்களில் சுரேஸ் சலே செய்த சம்பவம் அம்பலம்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே, நீர்கொழும்பு பகுதிக்கு 5 பேரை அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட பூஜைக்கு கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை திரட்டியுள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் அனைத்தும் தீவிரமான விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

சத்தியாக்கிரக போராட்டம்
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல விடயங்கள் வெளிவருகின்ற நிலையில் ஒரு தரப்பினர் கலக்கமடைந்து கோட்டை புகையிரத நிலையம் முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
எத்தனை நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அதற்கு அடிபணியப் போவதில்லை என்றும் சட்டத்தின் பிரகாரமே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொதுமக்கள் குறிப்பிட்டார்.
கடந்த 90 நாட்களில் சுரேஸ் சலே சகல மருத்துவ வசதிகளையும் பெற்றுக் கொண்டுள்ளார். அதேபோல் சகல சலுகைகளையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளார். அதற்கான ஆவணங்கள் உள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பயணத்தடை விதித்த பின்னரே, சுரேஸ் சலே எதுவும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் சித்திரவதைகுள்ளாவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.