2022 ஆம் ஆண்டு எங்களுடையது! எதிரணி விடுத்த சூளுரை
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ராஜபக்ஷக்களின் வருடம் அல்ல அது எங்களுடையது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் இருக்கும் ஏழை மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கி, நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை வழங்கி நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் மறுசீரமைப்பு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தலைமையில் இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கு கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.