பெண்களுக்காக இலங்கை வெகுதூரம் செல்லவேண்டும்; சஜித்
சுகாதார துவாய்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் பெண்களின் உரிமையை வென்றெடுப்பதற்கு இலங்கை நீண்ட தூரம் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதேவேளை சட்டமூலமொன்றை நிறைவேற்றியதன் மூலம் பெண்களுக்கான சுகாதார துவாய்களை இலவசமாக வழங்கும் உலகின் முதல் நாடாக ஸ்கொட்லாந்து திகழ்கிறது என்ற செய்தியை அவர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஸ்கொட்லாந்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்துக்கமைய, அது நடைமுறைக்கு வரும்போது, ஸ்கொட்லாந்தில் உள்ள கல்வியகங்கள் மற்றும் தேவை உள்ளவர்களுக்கு சுகாதார துவாய்கள் இலவசமாகக் கிடைக்கும்.
The Scottish Parliament agreed UNANIMOUSLY to this piece of legislation. Meanwhile the Sri Lankan Parliament is still jeering at the opposition for merely mentioning the word “PERIOD.”? Long way to go and no denying that period poverty is a serious issue. https://t.co/JIsFslDQpd
— Sajith Premadasa (@sajithpremadasa) August 15, 2022
இந்த சட்டமூலம் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக சஜித் பிரேமதாச,
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்றும் சிலர் “PERIOD” என்ற வார்த்தையை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகளை கேலி செய்து வருகிறதாக குறிப்பிட்டுள்ள அவர் பெண்களின் சுகாதாரம் மறுக்கப்படுவது தீவிரமான பிரச்சினையாகும் எனவும் சஜித் கூறியுள்ளார்.