இலங்கையிடம் படுதோல்வியடைந்த இந்தியா... 27 ஆண்டுகளுக்கு பின் சாதனை!
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 110 ஓட்டங்களால் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டியானது இன்றையதினம் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ அதிகபட்சமாக 96 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் ரியான் பராக் 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலங்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 26.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணித்தலைவர் Rohit Sharma அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றதுடன், Washington Sundar 30 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
இந்த தொடரில் 2- 0 கணக்கில் இலங்கை இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.
மேலும் சுமார் 27 வருடங்களின் பின்னரே இலங்கை அணி இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக ஒரு தொடரை வெற்றிகொண்டுள்ளது.
குறிப்பாக போட்டியில் அவிஷ்க 96 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை சார்பாக பந்து வீச்சில் துணித் 05 விக்கட்டுக்களை வீழ்த்தி அசத்தியுள்ளனர்.