சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணைகள் ஆரம்பம்
நிதி மோசடி சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மூன்று முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோருக்கு எதிராக இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
2011 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் விதிகளின்படி இந்த முன்னாள் அமைச்சர்கள் சொத்துக்களை ஈட்டியவை தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.