யாழில் 3 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் மூன்று நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
அளவெட்டி மத்தி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த வயது 72 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த முதியவர் மூன்று நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில், அளவெட்டி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும், காய்ச்சல் குணமடையவில்லை.
பின்னர் நேற்று அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.
அவரது உடலம் மீதான மரண விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
