உலகிலேயே சிறந்த நாடு இலங்கை! எதற்கு தெரியுமா? வெளியான தகவல்
அதிகப் பணம் செலவழிக்காமல் பெப்ரவரி விடுமுறையைக் கழிக்க உலகிலேயே சிறந்த நாடு இலங்கை என ஐக்கிய இராச்சியத்தின் ஊடக இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த வருடம் விடுமுறை எடுத்துக்கொண்டு வேறு நாட்டிற்குச் சென்று விடுமுறை எடுக்கக் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக அதிகப் பணம் செலவழிக்காமல் நல்ல சேவையைப் பெறக்கூடிய 12 நாடுகளின் பெயர்களை ஐ நியூஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் 75வது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியிருப்பதால் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், பெப்ரவரியில் விமான டிக்கெட்டுகளின் விலை குறைந்த அளவிலேயே இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஏப்ரலில் 145 ரூபாயாக இருந்த ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்று தற்போது 441 ரூபாயாக மாறியுள்ளதாகவும் குறித்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் மலைப் பிரதேசத்திற்கு 15 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு 1845 பவுண்டுகள் செலவாகும் என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.