பாடசாலை மாணவனின் உயிரை பறித்த கோர விபத்து
பொல்கஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யங்கல்மோதர - நாரம்மல வீதியில் உள்ள நைனாதெனிய சந்திக்கு அருகில், யங்கல்மோதரவிலிருந்து நாரம்மல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் இரு மோட்டார் சைக்கிள் சாரதிகளும் காயமடைந்து மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் யடிகலோலுவவைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் குருநாகல் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.