இலங்கையில் உயரப்போகும் மின் கட்டணம் ; வெளியான அதிர்ச்சி தகவல்
எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் இலங்கை மின்சார சபையினால் மின்சாரக் கட்டண உயர்வுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்டண திருத்தம்
இலங்கை மின்சார சபை 7.2 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு மூன்றாவது கட்டண திருத்தத்தைக் கோரிக்கையாக விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் இந்த காலாண்டில் இலங்கை மின்சார சபைக்கு 7.83 பில்லியன் ரூபாய் நிதிச்செலவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது மின்சார சபைக்கான நிதிச்செலவுகள் 2.48 பில்லியனாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தற்போது மக்கள் கருத்துக்களைக் கோரி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.