தமிழர் பகுதியொன்றில் குடும்ப பெண்ணுக்கு இரவில் நடந்தேறிய துயரம் ; நடுவீதியில் சம்பவம்
கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவர் மீது மோதி தப்பிச்சென்ற வாகனம் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று (20) மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
தப்பிச்சென்ற வாகனம்
கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த குடும்பபெண் ஒருவர் கடந்த 16ஆம் திகதி இரவு கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க சென்றுள்ளார்.
இதன்போது A9 வீதியில் வைத்து வாகனம் ஒன்று அவரை மோதியதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அந்தபகுதியை சேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச்சென்றிருந்ததுடன், இது தொடர்பாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் அதன் சாரதி,மற்றும் உரிமையாளர் ஆகியோர் விசுவமடு பகுதியில் வைத்து வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.
வாகனத்தின் நிறம் உட்பட ஏனைய அமைப்புக்களை மாற்றியமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.