கொழும்பு தீ விபத்து குறித்து வெளியான தகவல்
புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள மின்சார உபகரண விற்பனை நிலையமொன்றில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தலைமை தாங்குகிறார். நேற்று பிற்பகல் ஏற்பட்ட இந்த தீப்பரவல் பல மணி நேரம் முயற்சியின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
விசேட குழு
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையினர் ஆகியோர் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
தீயை அணைக்கவும், அருகிலுள்ள கட்டடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கவும் சுமார் 15 தீயணைப்பு வாகனங்களும் விமானப்படையின் பெல்-212 உலங்கு வானூர்தியொன்றும் இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன.
இந்த சம்பவத்தினால் எந்தவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என்பதுடன் பொருட் சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.