சூப்பர் ஓவர் திரில்லரில் இந்தியா ஏ அணியை வீழ்த்திய இலங்கை ஏ அணியின் அசத்தல் வெற்றி
இந்திய ஏ அணியுடன் நடைபெற்ற பரபரப்பான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், சூப்பர் ஓவர் மூலம் இலங்கை ஏ அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது.

266 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை ஏ அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமநிலைப்படுத்தியது.
இதையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக நடுவர்கள் சூப்பர் ஓவரை அறிவித்தனர். சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 16 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணியால் 9 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதன்மூலம், சூப்பர் ஓவரில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை ஏ அணி தொடரில் முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.