கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்
கொழும்பு ஹூனுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெர ஊர்வலத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 1 ஆகிய திகதிகளில் கொழும்பின் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நவம் பெரஹெர ஊர்வலம் இவ்விரு தினங்களிலும் மாலை 6.30 மணி முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதனால் ஜினரதன மாவத்தை, ஹூனுபிட்டிய ஏரி வீதி, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

குறிப்பாக பித்தளை சந்தி, கொம்பனித்தெரு சந்தி மற்றும் யூனியன் பெலேஸ் ஊடாக பயணிக்கும் வாகனங்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஊர்வலம் நடைபெறும் நேரங்களில் பொதுமக்களுக்கும் சாரதிகளுக்கும் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஊர்வலம் நிறைவடைந்ததும் வழமை போல போக்குவரத்து அனுமதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.