தவறான குறுஞ்செய்தி அனுப்பியவருக்கு நடிகை கொடுத்த அதிரடி சிகிச்சை ; வைரலாகும் வீடியோ
இந்தியாவில் சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பப்பட்டதாக கூறப்படும் தவறான குறுஞ்செய்தி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துணை நடிகை ஸ்ரீ அஸ்வினிக்கு, மணிகண்டன் என்பவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஆபாசமாகவும் அவதூறாகவும் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த நடிகை, அந்த குறுஞ்செய்தி அனுப்பிய நபர் பணியாற்றும் உணவகத்திற்கு நேரில் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் கைலாட்டமாக மாறியதாகவும், அதனைத் தொடர்ந்து மணிகண்டன் என்பவரை காவல்துறையிடம் நடிகை ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோ குறித்து இணையவாசிகள் மத்தியில் கலவையான கருத்துகள் வெளியாகி வருகின்றன. சிலர் நடிகையின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.
மறுபுறம், சட்டத்தை கையில் எடுப்பது சரியா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதாகவும், உண்மைகள் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.