இலங்கையில் நாளொன்றுக்கு நூறு புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்; பகீர் கிளப்பும் தகவல்
இலங்கையில் நாளொன்றுக்கு நூறு புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர்களில் 40 பேர் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2022ஆம் ஆண்டில் உலகில் 20 மில்லியன் புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி புற்றுநோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனாக உள்ளது.
அதேவேளை 2021ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக 14,986 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் புதிதாக பதிவாகும் புற்றுநோயாளிகளில் சுமார் 19,500 பேர் பெண்களும் 16,400 பேர் ஆண்களும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.