இயக்கச்சி றீச்சாவில் கோலாகலமாக இடம்பெற்ற திருமணம்; மகிழ்ச்சியில் புலம்பெயர் மணமக்கள்!
இயக்கச்சி றீச்சா சுற்றுலாவுக்கு மட்டுமல்லாது தமிழர் மரபுகளை கடைப்பிடிப்பதிலும் சிறந்து விளங்குகி2ன்றது.
அந்தவகையில் கிளிநொச்சி - இயக்கச்சி றீச்சாவில் புலம்பெயர் சுவிஸ் வாழ் இளைஞனுக்கும், சுவிஸ் நாட்டில் வாழும் யுவதி ஒருவருக்கும் மிக கோலாகலமாக திருமணம் இடபெற்றுள்ளது.

இயற்கை அழகுடன் அமையப்பெற்ற தென்னம் தோப்பில் திருமணம்
சுவிஸ் வாழ் மணமகன் விதுசன் , மற்றும் சுவிஸ் வாழ் மணமகள் சுமிதா ஆகியோருக்கு தமிழ் மரபு முறைப்படி ரீச்சாவில் இனிதே திருமணம் நடந்துள்ளது.
தற்போதைய இளையோர்கள் இயற்கையுடன் கூடிய திருமண அரங்கத்தையே திருமண மண்டபமாக தேர்வு செய்கின்றனர்.

அந்தவகையில் மேற்படி மணமக்களின் திருமணத்திலும் , றீச்சாவின் இயற்கை அழகுடன் அமையப்பெற்ற தென்னம் தோப்பில், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மண மேடையில் சிறப்பாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

அதுமட்டுமல்லாது றீச்சாவில் பறிமாறப்பட்ட திருமண விருந்தும் மணமக்கள், மற்றும் அவர்களுடன் வருகை தந்திருந்த புலம்பெயர் உறவுகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மணமக்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

