கனடாவில் அதிகாலையில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் ; தமிழரின் நகைக்கடை மீது துப்பாக்கிசூடு
கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் தமிழருக்கு சொந்தமான ஜெயசாயி நகைக்கடை மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான செய்தி நேற்று (01) வெளியாகியுள்ளது.

அதிகாலை வேளையில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில், கடையின் சில பகுதிகளில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் கடையில் பணியாளர்கள் எவரும் இருக்கவில்லை எனவும், இதனால் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகளை கனேடிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த நகைக்கடை ஸ்கார்பரோவில் Steeles Avenue East பகுதியில் அமைந்துள்ளதாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன.