யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்களில் 2 நாட்கள் மின்தடை
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (02) முதல் இரண்டு நாட்களுக்கு மின்சார விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா – மன்னார் 220 கிலோவோல்ட் மின் பரிமாற்ற வடத்தை மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக இந்த மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, இன்று (02) வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும், நாளை (03) சனிக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரையும் குறித்த மாவட்டங்களில் மின்சார விநியோகம் முழுமையாகத் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மின் பரிமாற்ற வடத்தை மாற்றியமைக்கும் பணிகள் நிறைவடைந்ததும் மின்சார விநியோகம் உடனடியாக மீள வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.