இறுதிப்போர் குறித்து சவேந்திர சில்வா அதிரடி விளக்கம்

Shavendra Silva Sri Lanka Army Sri Lanka Sri Lankan Peoples
By Sahana Sep 08, 2026 04:53 PM GMT
Report

இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சட்டமன்றத்தில் உடல்மொழி சர்ச்சை ; முதலமைச்சர் விஜய் விளக்கம்

சட்டமன்றத்தில் உடல்மொழி சர்ச்சை ; முதலமைச்சர் விஜய் விளக்கம்

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், தன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச அளவில் தன் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான அடிப்படை குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பாதுகாப்பு படையினர் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியிலேயே போரிட்டனர் என்றும், இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இறுதிப்போர் குறித்து சவேந்திர சில்வா அதிரடி விளக்கம் | Shavendra Silva Explains The Final Phase Of War

2020 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகளுக்கான காரணங்களை தொடர்ந்து கேட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்றும் தாய்நாட்டுக்காகவே போரிட்டதாகவும் தெரிவித்தார்.

இராணுவத்தினர் வேண்டுமென்றே பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை எனக் கூறிய சவேந்திர சில்வா, போரின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், ஆனால் அவை திட்டமிட்டுச் செய்யப்பட்டவை அல்ல என்றும் விளக்கமளித்தார்.

2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் தனது 58 ஆவது படைப்பிரிவு 123,000 க்கும் அதிகமான பொதுமக்களை மீட்டதாகவும், சரணடைந்த சுமார் 12,000 புலிகள் உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தனது படைப்பிரிவிடமே சரணடைந்ததாகவும் குறிப்பிட்டார். அவ்வாறு சரணடைந்தவர்கள் பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

புலிகளின் வட பிராந்திய சிரேஷ்ட தளபதி ஒருவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், சீருடை அணியாத போராளிகள் கொல்லப்படும் போது அவர்கள் பொதுமக்களாகக் கணக்கிடப்படும் சூழல் நிலவுவதாகக் கூறினார்.

மேலும், புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும் சாடினார்.

அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் சர்வதேச ரீதியில் இராணுவத்தின் பக்க நியாயங்களை சரியாக முன்வைக்கத் தவறியதே தன் மீதான குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் வலுப்பெறக் காரணம் என அவர் விமர்சித்தார்.

குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்துடன் கூடிய ஆதாரங்களுடன் நேரடியாக விவாதத்துக்கு வருமாறு சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்த அவர், தவறு நடந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்தார்.

மேலும், புலிகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், தமிழ் மக்களின் குறைகளுக்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையர்களுக்கு தாய்லாந்தின் இலவச விசா வசதி இரத்து

இலங்கையர்களுக்கு தாய்லாந்தின் இலவச விசா வசதி இரத்து

மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US