செவ்வாய் பெயர்ச்சியால் பணமும், சொத்துக்களும் குவிய போகும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இருப்பினும் இந்த பெயர்ச்சியின் போது குரு பகவான் இந்த ராசியில் இருப்பதால், செவ்வாயுடன் சேர்க்கை நிகழ்கிறது. இப்படியான நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

முக்கியமாக இப்பெயர்ச்சி அனைவருக்கும் சிறப்பான பலனை தந்துவிடாது, சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்கலாம். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் இந்த பெயர்ச்சியால் சொந்த வீடு, கார் வாங்கும் கனவு நனவாகும் வாய்ப்புள்ளது. இப்போது செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை வாங்கி குவிக்கும் யோகத்தை பெறுகிறார்கள் என பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயங்களைப் பெறுவார்கள். மேலும் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். அதுமட்டுமின்றி பல புதிய வழிகளில் இருந்து பணம் வந்து குவியும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இதன் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். பரம்பரை சொத்து தொடர்பான விஷயங்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது முடிவுக்கு வருவதோடு, அதன் மூலம் நல்ல ஆதாயங்களும் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். பரம்பரை சொத்து விஷயங்களில் உள்ள பிரச்சனைகள் தீரும். சொல்லப்போனால் மூதாதையர் சொத்து கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. ஆனால் எந்த ஒரு பெரிய முதலீடுகளை செய்வதாக இருந்தாலும், ஆவணங்களை நன்கு படித்து பார்த்து, பின் முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. புதிய வழிகளில் இருந்த பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
