குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்து 'பாசிவ் கூலிங்' முறைகளை ஊக்குவிக்க இலங்கை அழைப்பு
குளிரூட்டிகளின் (A/C -Air Conditioning) பயன்பாட்டைக் குறைத்து, கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாரம்பரிய மற்றும் நவீன 'பாசிவ் கூலிங்' (Passive Cooling) முறைகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
காதலருடன் 2 மாதம் உல்லாசம் ; வீட்டுக்கு திரும்பி வந்து கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த மனைவி
ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டம் (UNEP) மற்றும் 'குளிர்விப்பு கூட்டமைப்பு' (Cool Coalition) இணைந்து கடந்த15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடத்திய 'உலகளாவிய குளிர்விப்பு உறுதிமொழி பேரவை 2026' (Global Cooling Pledge Assembly 2026) நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை தூதுக்குழுவினால் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.
இந்தப் பேரவையில் கலந்துகொண்டு உரையாற்றிய சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜயக்கொடி, 'பாசிவ் கூலிங்' முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வீடுகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்களின் உட்புற வெப்பநிலையை A/C இயந்திரங்களின் அதிகளவிலான பயன்பாடின்றி சுமார் 23°C முதல் 25°C வரை பராமரிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

உள்ளூர் சூழலுக்கு ஏற்ற நடைமுறைச் செயல்பாடுகள் மூலம் இந்த மாற்று முறைகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை தூதுக்குழுவினர் வலியுறுத்தினர்.
மேலும், கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும், உயர்ந்து வரும் உலகளாவிய வெப்பநிலையை எதிர்கொள்ளவும் 'தேசிய குளிர்விப்பு கொள்கை' (National Cooling Policy) ஒன்றை உருவாக்குவதற்கான திட்டங்கள் குறித்தும் இலங்கை அங்கு சுட்டிக்காட்டியது.
கடுமையான வெப்பத்துக்குத் தீர்வு காண்பது மற்றும் சுற்றுச்சூழல் நட்புமிக்க குளிர்ச்சி அமைப்புகளை ஊக்குவிப்பது குறித்து இந்தப் பேரவையில் கவனம் செலுத்தப்பட்டது.
காலநிலை மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் பாசிவ் கூலிங் முறைகளை ஊக்குவிப்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசிவ் கூலிங் (Passive Cooling) முறை என்பது மின்சாரம் அல்லது செயற்கையான குளிரூட்டிகள் (Air Conditioners / Fans) ஏதும் இன்றி, இயற்கை வழிகளிலேயே ஒரு கட்டடத்தின் உட்புற வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் வடிவமைப்பு நுட்பமாகும்.
அதாவது, வெப்பம் கட்டடத்துக்குள் நுழைவதைத் தடுப்பது மற்றும் கட்டடத்துக்குள் இருக்கும் வெப்பத்தை இயற்கை காற்றுச் சுழற்சி மூலம் வெளியேற்றுவது இதன் முதன்மை நோக்கமாகும்.