யாழ் மாநகர சபை உறுப்பினர் பதவி நீக்கத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை
யாழ் மாநகர சபை உறுப்பினர் சுவீகரன் நிசாந்தனின் பதவி நீக்கத்துக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிரப்பித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் யாழ் மாநகர சபைக்கு தெரிவான குறித்த உறுப்பினரை சில மாதங்களுக்கு முன்னர் அரச அமைச்சர் கலந்து கொண்ட மாநகரசபை நிகழ்வு ஒன்றில் குறித்த உறுப்பினர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு கட்சி ஒழுங்காற்று நடவடிக்கை எனும் பெயரில் உறுப்பினர் பதவியை நீக்குவதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பி இருந்தது.

இந்நிலையில் குறித்த கடிதத்திற்கு இடைக்கால தடை விதிக்குமாறு யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணி மணிவண்ணன் ஊடாக வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கில் குறித்த மாநகர சபை உறுப்பினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பதவி நீக்கம் தொடர்பில் தனது கட்சிக்காரர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை காரணங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்த சட்டத்தரணி வி. மணிவண்ணன் பதவி நீக்கத்துக்கு இடைக்கால தடை வழங்குமாறு நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்தார்.
ஆராய்ந்த நீதிபதி எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மாநகர சபை உறுப்பினரின் பதவி நீக்கத்துக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கி தவணையிட்டார்.