பாராளுமன்றத்தில் செயல்படாத 4 தமிழ் உறுப்பினர்கள்
ஜேவிபி சார்பாக வடக்கு கிழக்குக்கிலிருந்து ஏழு தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்
இவர்களில் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, செல்லத்தம்பி திலகநாதன் மற்றும் கந்தசாமி பிரபு ஆகிய 4 பேர் பாராளுமன்றத்தில் செயல்படாத (Inactive) தமிழ் உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்கள்
குறிப்பாக Manthri.lk என்கிற ஆய்வு நிறுவனம் செயல்பாடுகள் அடிப்படையில் வழங்கியுள்ள தரவரிசையில் இறுதி இடமான 225 ஆவது இடத்தை இவர்கள் நான்கு பேரும் பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்
இதில் செல்லத்தம்பி திலகநாதன் என்பவர் அரிசி பற்றாக்குறைக்கு நாய்கள் தான் காரணம் என்றும் மனிதர்களை விட நாய்கள் அதிக அரிசியை உண்கின்றன என்றும் பாராளமன்றத்தில் உரையாற்றி இருந்தார்
அதே போல ஸ்ரீ பவானந்தராஜா, செல்லத்தம்பி திலகநாதன், கந்தசாமி பிரபு ஆகியோர் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தனர்
இது போதாதென்று இந்த பட்டியலில் உள்ளடங்காத கருணாநந்தன் இளங்குமரன் மற்றும் ஆறுமுகம் ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரும் ஒரு இரு தடவை எழுத்து கூட்டி வாசித்ததை தவிர எந்த Impact யையும் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தவில்லை.
குறிப்பாக ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, கருணாநந்தன் இளங்குமரன் ஆகியோர் பாதீடு தொடர்பான விவாதங்களையே தவிர்த்து வருகின்றார்கள் என சொல்லப்படுகின்றது
திருகோணமலையிலிருந்து ஜேவிபி சார்பாக தெரிவு செய்யப்பட்ட திரு அருண் ஹேமசந்திரா தவிர்ந்த ஏனைய ஆறு உறுப்பினர்களும் விவசாயம், வளங்கள், வர்த்தகம், நிதி, கல்வி, பொருளாதாரம், சட்டம் வேலைவாய்ப்பு உட்பட எந்த விவாதங்களிலும் எதிர்வரும் காலங்களிலும் கூட பங்களிக்க போவதில்லை
மக்கள் சார்ந்து எந்தவொரு தனிநபர் பிரேரணைகளையோ ,எழுத்து மூல கேள்விகளையோ முன்வைக்க போவதில்லை பிரதமர் உட்பட அமைச்சர்களிடம் கூட எந்தவித துறை சார் கேள்விகளையும் எழுப்ப போவதில்லை குறைந்தபட்சம் பொது தளங்களில் நெருக்கடிகள் உருவாகும் போது மக்கள் சார்பாக கூட இவர்கள் யாரும் நிற்க போவதில்லை
ஜேவிபி தலைமைக்கு ஆதரவாக கண்ணை மூடி கொண்டு வாக்கெடுப்புகளில் கையை தூக்குவதை தவிர எதையும் சாதிக்க போவதில்லை சட்டவாக்க சபையான பாராளமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் போது அவர்களுடைய Integrity and Honesty, Knowledge and Competent, Empathetic and Attuned to Public Concerns, Visionary and Forward-Thinking, Strong Communication Skills, Experience and Track Record பல்வேறு விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, காலத்திற்கு காலம் வெறும் கோமாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதால், பொது மக்கள் சரியான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதில்லை
இதற்கிடையில் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் மாகாண சபையையிலும் இவ்வாறான ஜேவிபியின் அதி புத்திசாலிகளை வெல்ல வைக்கும் கருத்துருவாக்கங்களை ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள் வேடங்களில் உள்ள ஒட்டுக்குழுக்கள் மற்றும் அரச துதிபாடிகள் செய்கின்றன