கனடா-அமெரிக்கா வர்த்தக போர்: ட்ரூடோ கடுமையான பதிலடி அறிவிப்பு
அமெரிக்கா, கனடிய பொருட்களுக்கு 25% வரி விதித்ததைத் தொடர்ந்து, கடுமையான பதிலடி அளிக்கத் தயாராக உள்ளது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்த தார்மீகமற்ற முடிவை கனடா அமைதியாக பார்க்கப் போவதில்லை," என்று பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி
அமெரிக்காவின் வரிகள் அமலுக்கு வந்தவுடன், கனடா மின்னல் வேக பதிலடியாக $155 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி விதிக்கும் என தெரிவித்துள்ளார்.
மொத்தமாக $30 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க பொருட்கள் மீதான முதல் கட்ட வரிகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
21 நாட்களுக்குப் பிறகு, மேலும் $125 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கனடாவுக்கு மட்டுமல்ல, அவர்களுக்கே தீங்கு விளைவிக்கும்," என வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி கண்டனம் தெரிவித்தார்.