தங்க கடாயில் சமையல் செய்யும் சீன பெண்; சமூகவலைத்தளங்களில் வைரல்!
சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தங்கத்தில் செய்த கடாயில் ( தாச்சியில்) சமையல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சீனாவின் மிகப்பெரிய தங்க விற்பனை மையமாக உள்ள ஷென்சென் ஷுய்பெய் நகரில் ஷுய்பே புபு என்ற இளம்பெண், இரு நகைக் கடைகளை நடத்தி வருகிறார்.
அவரது கடையில் தங்க நகை ஆபரணங்கள் மட்டுமன்றி தங்கத்திலான சமையல் பாத்திரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
ரசித்து, ருசித்து சாப்பிடும் வீடியோ
நகைக்கடை உரிமையாளரான ஷுய்பே புபு தங்க கடாயில் சமையல் செய்து ரசித்து, ருசித்து சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து ஷுய்பே புபு கூறியதாவது, ஒரு வாடிக்கையாளருக்காக ஒரு கிலோ தங்கத்தில் கடாய் தயார் செய்துள்ளோம்.
இதன் மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் என கூறப்படுகின்றது. இரும்பு, அலுமினியம் கடாயைவிட தங்க கடாயில் வேகமாக சமையல் செய்ய முடியும். வாடிக்கையாளரின் அனுமதி பெற்று எங்கள் நகைக்கடையில் தயாரிக்கப்பட்ட தங்க கடாயில் நானே சமையல் செய்து பார்த்தேன்.
In Shenzhen, China, a woman used a 1-kilogram pure gold pot, valued at nearly $100,000, to prepare #hotpot . pic.twitter.com/tRtJNNKlE8
— Discover GuangZhou (@Discover_GZ) February 20, 2025
சுவையில் எந்த வித்தியாசமும் இல்லை. இதுபோன்ற தங்க கடாயை தயார் செய்ய பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர் என ஷுய்பே புபு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பரவும் தங்க கடாய் சமையலும் ஒரு நூதன விளம்பர உத்தி என சர்வதேச வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.