நவராத்திரியின் இரண்டாம் நாள் ; எப்படி வழிபடணும் தெரியுமா?
நவராத்திரியின் இரண்டாம் நாளில் பூஜிக்கப்படும் துர்கா தேவியின் வடிவம் என்றால், அது பிரம்மச்சாரிணி தேவியாகும். புராணங்களின் படி, இந்த பிரம்மச்சாரிணி தேவிக்கு பின் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. அது என்னவெனில், பிரம்மச்சாரிணி தேவி சிவபெருமானின் துணையாக வேண்டுமென்று கடுமையான தவத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
சிவபெருமானைப் பிரியப்படுத்துவதற்காக கடுமையான தவங்களை பிரம்மச்சாரினி தேவி மேற்கொண்டுள்ளார். அவருடைய அசைக்க முடியாத பக்தியாலும், கடுமையான தவத்தினாலும் சிவபெருமான் கவரப்பட்டார். இறுதியாக அவர் முன் தோன்றி, தனது துணைவியாக மாறும் வரத்தை அருளினார். அன்று முதல் திருமணமாகாத வடிவத்தைக் குறிக்கும் விதமாக பிரம்மச்சாரிணி என்று அழைக்கப்பட்டார்.

பூஜை நேரம்
நவராத்திரி இரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணி தேவிக்கு பூஜை செய்ய சிறந்த நேரம் காலை 06.15 மணி முதல் 7.15 மணி வரை மற்றும் மாலை 4.45 மணிக்கு மேல் நவராத்திரி பூஜை செய்யலாம். மேலும் ராகு காலம், எமகண்டம் தவிர்த்து எந்த நேரத்திலும் பூஜைகளை செய்யலாம்.
பிரம்மச்சாரிணி தேவிக்கான மலர்
பிரம்மச்சாரிணி தேவி எப்போதும் தவத்தில் இருக்க விரும்புகிறார். எனவே, அவளுக்கு ரோஜா பூக்களை வழங்குவது மிகவும் நல்லது. இந்த பூக்களை கொண்டு அலங்காரம் செய்து, பூஜைகளை செய்து வழிபடுவது சிறந்தது.
பிரசாதம்
பிரம்மச்சாரிணி தேவிக்குரிய நிறம் சிவப்பு என்பதால் கேசரி, சுண்டல் அல்லது பிற சிவப்பு நிற இனிப்புகளை படைத்து வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.
பிரம்மச்சாரிணி தேவிக்கான மந்திரம்
பீஜ் மந்திரம் "ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரூம் பிரம்மச்சாரிணி நமஹ"
பிரம்மச்சாரிணி தேவியை நினைத்து பூஜைகள் செய்வதால், அவர் தன் பக்தர்களுக்கு வலிமை, ஞானம், சுயக்கட்டுப்பாடு மற்றும் ஆன்மீக உண்மைகளைப் பற்றிய ஆழமான புரிதலை அருளுவதாக நம்பப்படுகிறது. மேலும் பிரம்மச்சாரிணி தேவி தனிநபர் ஒழுக்கம், நேர்மை மற்றும் நேர்மையான வாழ்க்கையை வாழ ஊக்குவிக்கிறார்.
