ஏழரை சனி யாரை பாதிக்கும்? கஷ்டப்படப்போகும் ராசிகள்
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியிலிருந்து, மீன ராசிக்கு 2025 மார்ச் 29ம் தேதி, பங்குனி 15ம் தேதி சனிக்கிழமை அன்று பெயர்ச்சியானார்.
இதன் காரணமாக சில ராசியினர் சனியின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளனர். சில ராசியினர் சனியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அடுத்த இரண்டரை ஆண்டுகள் சனி அதிகம் பாதிப்பு தரக்கூடிய ஏழரை சனி யாருக்கெல்லாம் பாதிக்கும், எதில் கவனமாக இருக்க வேண்டும் என நாம் இங்கு பார்ப்போம்.
மேஷ ராசி
சனி பகவன் மீன ராசியில் பெயர்ச்சியாகியுள்ள நிலையில், மேஷ ராசிக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது. உங்கள் ராசிக்கு 12ம் வீடான விரய ஸ்தானத்தில் அடுத்த 2 ½ ஆண்டுகள் சஞ்சரிக்க உள்ளதால் பொருளாதார நிலையில் கடுமையான பாதிப்பும், வீண் விரயங்களும் ஏற்படும். திடீரென பெரிய செலவுகள் ஏற்படலாம். அதனால் சேமித்த பணம் குறைய வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் எதிரிகளால் பிரச்னை அனுபவிக்க நேரிடும்.
அதனால் நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலிலும் கூடுதல் கவனம் தேவை. சனியின் பார்வை ராசிக்கு 10ம் வீட்டில் விழுவதால் உங்கள் வேலை, தொழில் மூலமாக அனுகூல பலன், வருவாய் குறைவாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் குழப்பமான மனநிலையும், பிறர் மூலம் குறைவான ஆதரவும் கிடைக்கும். அதனால் எந்த சூழலிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கத் தவறாதீர்கள். பரிகாரம் : விரய சனி என்பதால், உங்கள் செலவுகளை சுப விரயமாக்கப் பார்க்கவும். சேமிப்பு, சுப காரியங்களுக்காக செலவிடவும்.
கும்ப ராசி
சனி பகவான் உங்கள் ராசியிலிருந்து நகர்ந்துள்ளதோடு, ஏழரை சனியின் கடைசி பகுதியான பாத சனி நடக்க உள்ளது. இதனால் கும்ப ராசியை சேர்ந்தவர்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகள் கலவையான பலன்களையே பெறுவார்கள். ஓரளவு சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே போல பிரச்னைகளையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவாகவே கிடைக்கும். புதிய சொத்து வாங்குதல், தொழில் தொடங்கும் விஷயத்தில் மிக கவனமாக இருப்பது நல்லது.
பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பணப்பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. சனியின் அமைப்பால் உங்கள் செயல்பாடு, பேச்சில் கவனக்குறைவு ஏற்படும். இதனால் தேவையற்ற நிதி இழப்பு, மரியாதை இழப்பு ஏற்படும். இந்த காலத்தில் உங்கள் உடல்நலனில் பிரச்சினைகள் சந்திக்க வாய்ப்புள்ளது.
மீன ராசி
மீன ராசிக்கு ஏழரை சனியின் முதல் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்து, தற்போது ஜென்ம ராசியில் சனி நுழைந்துள்ளார். அதனால் மீன ராசிக்கு அடுத்த 2 ½ ஆண்டுகள் மிகவும் கடினமான காலமாக இருக்கும். அதனால் எந்த ஒரு செயலிலும், சூழலையும் கவனமாக கையாள வேண்டியது அவசியம். சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.
உடல் மற்றும் மனநல பிரச்னைகளைகளும், கவனக்குறைவும் ஏற்படும். நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழிலில் நம்பிக்கையின்மை அதிகரிக்கும் அதனால் சரியான முடிவு எடுக்கமுடியாமல் கஷ்டப்படுவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் பணிகளை தினமும் திட்டமிட்டு செயல்படவும். அன்றாட வேலைகளை ஒத்திவைக்க கூடாது. இல்லையெனில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகும். எந்த செயலிலும் பொறுமை, கவனம் தேவை