இனி உலக அரங்கில் ரஷ்ய அதிபர் புதின் தனிமைப்படுத்தப்படுவர்! ஜோ பைடன்
உக்ரைன் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ள ரஷ்யா மற்றும் அதிபர் விளாதிமிர் புதின் (Vladimir Putin), இனி உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படுவர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட ரஷ்யா, தலைநகர் கீவுக்குள் நுழைந்து பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டுகளை வீசியதுடன் பல நகரங்களில் உக்ரைனிய இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யா மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளை விவரித்தார். அப்போது அவர் ரஷ்யாவின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.
அதன் விவரம்,
ரஷ்யா திட்டமிட்ட உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. ரஷ்ய ராணுவம் ஆத்திரமூட்டல் அல்லாமல் நேரடியாகவே யுக்ரேன் மீது கொடூர தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதல் திடீரென நடந்ததாக தோன்றவில்லை. இது பல மாதங்களாக நன்கு திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது.
1,75,00 துருப்புக்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை யுக்ரேனின் எல்லைகளுக்கு அருகே நகர்த்திய புதின் முன்னேற்பாடகவே ரத்த வங்கி போன்ற அமைப்புகளையும் அங்கே நிறுவியிருக்கிறார்.
போருக்கு தயாராகும் நிலைமை போல அங்கே கள மருத்துவ முகாம்களையும் நிறுவினார். இதை எல்லாம் பார்க்கும்போது ரஷ்ய அதிபரின் நோக்கம் தெளிவானது.
"ஆதாரமற்ற கூற்றுகள்" மற்றும் ஆத்திரமூட்டல் முயற்சிகளுடன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் திட்டங்கள் பெரும்பாலும் அமெரிக்காவால் முன்பே கணிக்கப்பட்டது. ரஷ்யாவின் சாத்தியமிகு தாக்குதல் பற்றி அமெரிக்கா பல பல வாரங்களுக்கு முன்பே எச்சரிக்கைகளை விடுத்தது.
தாக்குதலை தொடங்குவதற்கான ரஷ்ய அரசாங்க முயற்சிகளுக்கு முன்பாக, கிழக்கு யுக்ரேனில் உள்ள பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலைகள் மீது சைபர் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியது. சர்வதேச சட்டத்தை "அப்பட்டமாக" மீறும் வகையில் ரஷ்யா ஈடுபட்டிருக்கிறது என்று ஜோ பைடன் (Joe Biden) குற்றம்சாட்டினார்.