கொட்டாஞ்சேனை தூப்பாக்கிச் சூடு சம்பவம் ; மேலும் மூவர் கைது
கொட்டாஞ்சேனை - 16 ஆம் ஒழுங்கை பகுதியில் கடந்த 17ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட மேலும் 3 பேர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் வெல்லம்பிட்டி மற்றும் கிரான்ட்பாஸ் பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கித்தாரிக்கு தங்குமிட வசதி மற்றும் வாகன உதவிகளை வழங்கிய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து ஒரு முச்சக்கரவண்டியும், 2 கையடக்க தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதானவர்கள் கொழும்பு 13 மற்றும் கிரான்ட்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்து வருகின்றது.
முன்னதாக குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.