உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி மரணம் - விசாரணையில் வெளியான தகவல்
தம்புள்ளையில் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர் நேற்று காலை அவரது அறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த மாணவியின் மரணம் உயிரை மாய்த்துக் கொண்டமையினால் ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.
தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் நேற்று காலை இறந்த மாணவியின் உடலில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது இது தெரியவந்துள்ளது.
விசாரணையில் வெளியான தகவல்
உயிரியல் துறையில் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த 19 வயது மாணவி ஒருவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உறக்கத்தில் இருந்து மாணவி எழுந்திருக்காததால், அவரது பெற்றோர் தேடியுள்ளனர்.
அங்குள்ள அறையில் அவர் மயக்க நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.