ஈழ தமிழர் பிரச்சனையில் இந்தியா நுழைந்தது போல... உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்யா!

Srilanka India Russia Ukraine War EElam
By Sulokshi Feb 24, 2022 06:11 PM GMT
Sulokshi

Sulokshi

Report
Courtesy: oneindia.com

இலங்கையில் ஈழத் தமிழர் விவகாரத்தை முன்வைத்து இந்தியா தலையிட்டதைப் போல தற்போது உக்ரைனில் ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகளை முன்வைத்து ரஷ்யாவும் உள்ளே நுழைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழ் இன மக்கள் ஆவார்கள் . ஆனல் சிங்கள மக்கள் இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் . இலங்கையில் தனித் தமிழ் அரசுகள் நிலை கொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டு அரசுகளுடன் அரசியல் தொடர்பில் ஒரு அங்கமாகவும் ஈழம் இருந்தது.

அதேபோல் இலங்கையின் தென்பகுதியில் சிங்கள அரசுகள் இருந்தன. அதன் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கை ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக்கப்பட்டது. ஆங்கிலேயர் இலங்கை திரு நாட்டை விட்டு வெளியேறிய போது தென்னிலங்கை சிங்களவர்களரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தனர்.

ஈழ தமிழர்  பிரச்சனையில் இந்தியா நுழைந்தது போல... உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்யா! | Russia Entered Ukraine As India Eelam Tamil Issue

அன்று முதல் பூர்வகுடி மக்களாகிய தமிழர்கள் ஒடுக்குமுறைக்கும் இனப்படுகொலைகளுக்கும் உள்ளாகி வந்த நிலையில் அதன் உச்சமாகத்தான் ஈழத் தமிழர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தியிருந்தனர். ஈழத்தமிழர்களின் ஆயுத யுத்தம் மகிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக பதவி வகுத்த காலத்தில் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

ஈழத்தமிழர்களின் பிரச்சனையில்  இந்தியாவின் தலையீடு;

1983 ஜூலை படுகொலைகளுக்குப் பின்னர் இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா தலையிட்டது. இந்தியாவுக்கு ஈழப் போராளிகள் வரவழைக்கப்பட்டு ஆயுதங்களும் ஆயுதப் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன.

வங்கதேச விடுதலையை பெற்றுத் தந்த பாணியில் ஈழத் தமிழர் விடுதலைக்கு வியூகம் வகுத்து செயல்பட்டார் அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி . இந்திரா காந்தி 1984-ல் படுகொலை செய்யப்பட்டு ராஜீவ் காந்தி பிரதமரானார்.

அதன்பின்னர் 1989-ல் ஈழத் தமிழர் பிரச்சனையை முன்வைத்து இந்தியா- இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் இந்திய இராணுவத்தினரின் அட்டூயம் தாங்க முடியாமல் ஒருகட்டத்தில் இந்திய ராணுவத்துக்கு எதிராக யுத்தம் நடத்த வேண்டிய நிலைக்கு ஈழத் தமிழர்கள் தள்ளப்பட்டனர்.

இது 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையில் போய்நின்றது. அதன்பின்னர் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியா தலையிடாமல் ஒதுங்கியே நிற்கிறது.

இந்த நிலையில் இலங்கை, ஈழத் தமிழர், இந்தியா என்கிற மூன்று பிரதான பாத்திரங்கள் அப்படியே தற்போது உக்ரைன் விவகாரத்திலும் இருக்கிறது.

உக்ரைனில் உக்ரேனிய மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது. பல பிராந்தியங்களில் ரஷ்ய மொழியும் ஆட்சி மொழியாக உள்ளது. ரஷ்யாவில் இருந்து குடியேறியவர்கள் ரஷ்ய மொழி பேசுகின்றனர்.

ஈழ தமிழர்  பிரச்சனையில் இந்தியா நுழைந்தது போல... உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்யா! | Russia Entered Ukraine As India Eelam Tamil Issue

ரஷ்யாவுடன் தொப்புள் கொடி உறவாக இருக்கின்றன. இப்படி உக்ரைனில் குடியேறியவர்கள் பெரும்பான்மையினராக சிங்களரைப் போல உருவெடுத்துள்ளனர். இதனால் உக்ரேனிய, ரஷ்ய மொழி மேலாதிக்கம் தொடர்பான சர்ச்சைகள் வெடித்தன.

இது தொடர்பாக கருத்து வாக்கெடுப்புகளும் நடத்தப்பட்டன. சோவியத் ஒன்றியம் உடைந்து உக்ரைன் 1991-ல் தனி சுதந்திர நாடானது முதல் இந்த மொழிச்சிக்கல் கூர்மையடைந்தது. கிரீமியா ஆக்கிரமிப்பு 2014-ம் ஆண்டு வரை ரஷ்யா ஆதரவு அரசுகள்தான் உக்ரைனில் இருந்தது.

ரஷ்யாவின் மேலாதிக்கத்துக்கு எதிரான உக்ரைனிய தேசிய இன உணர்வு தீவிரமடைந்தது. இதனால் ரஷ்யா ஆதரவு அதிபர் தூக்கியடிக்கப்பட்டார். இதற்கு பதிலடி தரும் வகையில் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை ரஷ்யா ஆக்கிரமித்தது.

அத்துடன் உக்ரைனில் ரஷ்ய மொழி பேசுகிறவர்களிடையே பிரிவினைவாதத்தை விதைத்தது. ரஷ்யாவுடனான எல்லை மாகாணங்களில் ஆயுதக் குழுக்கள் கை ஓங்கும் அளவுக்கு ரஷ்யா ஆயுத உதவி செய்தது. ஒருகட்டத்தில் உக்ரைனில் இருந்து தாங்கள் தனி தேசமாக பிரிந்து விட்டதாகவும் ரஷ்யா ஆதரவு ஆயுத குழுக்கள் 2 மாகாணங்களில் பிரகடனம் செய்தன.

ஈழ தமிழர்  பிரச்சனையில் இந்தியா நுழைந்தது போல... உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்யா! | Russia Entered Ukraine As India Eelam Tamil Issue

உக்ரைன் பிரிவினைவாதிகள்- ரஷ்யா

இதனைத் தொடர்ந்து இந்தியா இலங்கை ஒப்பந்தம் போல பிரிவினைவாதத்தை முன்வைத்து ரஷ்யாவும் உக்ரைனும் மின்ஸ்க் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டன.

ரஷ்ய தேசிய இனத்தின் மேலாதிக்கத்தை விரும்பாத உக்ரைன், தமது இறையாண்மையை பாதுகாக்க அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ சக்திகளுடன் கரம் கோர்த்தது. இது தமக்கு பேராபத்து என அச்சப்படுகிறது ரஷ்யா. இதனால் பிரிவினைவாதிகளுக்கு அதாவது ரஷ்ய ஆயுத குழுவினருக்கு ஆதரவு என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கிறது ரஷ்யா.

தமது தேசிய இனத்தின் உரிமையை நிலைநாட்டவும் தமது நிலத்தின் இறையாண்மையை பாதுகாக்கவும் வேண்டிய நெருக்கடியில் உள்ள உக்ரைனுக்கு நட்பு சக்திகளாக நேட்டோ நாடுகள் எப்படி உதவ போகின்றன? அப்படி உதவி செய்ய இறங்கினால் உலக யுத்தம் தவிர்க்க முடியாததாகிவிடுமா? என்ற பெருங்கவலையுடன்   ரஷ்யா -  உக்ரேனிய விவகாரத்தை  சர்வதேச சமூகம் அவதானித்துக்கொண்டிருக்கின்றனது.            

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US