பணம் கொட்ட சிறுமியை நிர்வாணமாக்கி பூஜை; ஆறு மாதகாலம் அரங்கேறிய சம்பவம்
ஆந்திராவில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜை என்ற பெயரில் சிறுமி ஒருவர் ஆறு மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அனந்தபுரம் நகரத்திற்கு ஓட்டல் வைப்பதற்காக குடிபெயர்ந்துள்ளார்.
அப்போது மகாலட்சுமி என்ற உள்ளூர் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். மகாலட்சுமி குடும்பத்தினருடன் நன்கு பழகிய நிலையில், அவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.

சிறப்புப் பூஜைகள்
ஓட்டல் தொழிலில் பெரிதாக லாபம் வராது, எளிதாக நீங்கள் செல்வந்தர் ஆவதற்கு என்னிடம் யோசனை உள்ளது என, “உங்கள் மகள் நிர்வாணமாக அமர்ந்து சிறப்புப் பூஜைகள் செய்தால், அளவற்ற செல்வத்தையும், செழிப்பையும் பெறலாம்” என தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் பெற்றோர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்பு மகாலட்சுமியின் வற்புறுத்தலின்பேரில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மகாலட்சுமியின் பேச்சை நம்பி சிறுமியை பூஜைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு போலி மந்திரவாதி பூஜைக்காக வரவழைக்கப்பட்டு, சிறுமியை ரகசிய இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளறனர்.
அங்கு சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றி, தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு்ள்ளார்.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது மற்றும் மாந்திரீக வழிபாடு ஆகிய குற்றங்களுக்காக, மகாலட்சுமி, ஹேமந்த், பாலசுப்ரமணியம் மற்றும் வெங்கடேஷ் யாதவ் ஆகியோர் மீது போக்சோ சட்டம் மற்றும் இன்னும் சில பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சிறப்புப் படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடிவருகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.