பேருந்தை விட அலங்காரத்துக்கே அதிக செலவு ; எல்ல விபத்து தொடர்பில் அம்பலமாகும் விடயங்கள்
எல்லயில் விபத்துக்குள்ளான பேருந்தின் பெறுமதியை விட அலங்காரத்துக்கு அதிக செலவு செய்யப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட தலைமை மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
பேருந்தை 5.5 மில்லியன் ரூபாய்க்கு உரிமையாளர் கொள்வனவு செய்துள்ளதாகவும், பேருந்தை அலங்கரிக்க சுமார் 7 மில்லியன் ரூபாய் செலவிட்டதாகவும் பண்டார கூறினார்.
பேருந்து முறையாகப் பராமரிக்கப்படவில்லை
பேருந்து விபத்து தொடர்பான விசாரணையில் தானும் பங்கேற்றதாகக் குறிப்பிட்ட அவர், பேருந்தின் உரிமையாளருடனான கலந்துரையாடல்களின் போது இந்த விடயம் தெரியவந்ததாக ஜாலிய பண்டார குறிப்பிட்டார்.
பேருந்தின் வடிவமைப்பிற்காக அதிக அளவு பணம் செலவிடப்பட்டிருந்தாலும், பேருந்து முறையாகப் பராமரிக்கப்படவில்லை என ஜாலிய பண்டார கூறினார்.
மேலும் பயணம் செய்வதற்கு முன், தேர்ந்தெடுக்கும் வாகனத்தின் பாதுகாப்பு, வாகனம் முறையாகப் பராமரிக்கப்பட்டுள்ளதா, அந்த வாகனத்தின் ஓட்டுநரின், நடத்தை ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனப் பொதுமக்களை அவர் வலியுறுத்துகிறார்.