தமிழகத்தில் தஞ்சமடைந்தவர்களில் ஒருவர் தேடப்படும் சந்தேக நபர்!
இலங்கையில் இருந்து கடந்த இரு நாட்களில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள 16 பேரில் ஒருவர் , கிளிநொச்சியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிலிருந்து நேற்று மற்றும் இன்று யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் திருகோணமலையை சேர்ந்த 06 குடும்பங்கள் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர்.
குறித்த 06 குடும்பங்களை சேர்ந்த 16 பேரிடமும் தமிழக கடலோர காவல் படையினர் மற்றும் க்யூ பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கொள்ளை
இந்நிலையில் தஞ்சம் கோரி சென்றவர்கள் தொடர்பில் இலங்கை பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் 16 நபர்களில் ஒருவர் கிளிநொச்சி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றினை உடைத்து நகைகளை கொள்ளையடித்த குற்ற செயலின் பிரதான சந்தேக நபர் என கண்டறிந்துள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர் நபர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள நிலையில் தமிழகம் தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தமிழகம் சென்றுள்ள ஏனையவர்கள் தொடர்பிலும் இலங்கை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.