கொடூர விபத்தில்14 வயது சிறுமியின் கால் அகற்றம் ; சட்டவிரோதமாக கெப் செலுத்திய மாணவன் மீது விசாரணை தீவிரம்

Monaragala Colombo Hospital Sri Lanka Police Investigation Accident
By Sahana May 20, 2026 05:00 PM GMT
Report

மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியின் சிறிகல, கிரிமண்டல சந்திக்கருகில் இடம்பெற்ற கொடூரமான விபத்தில் 14 வயதுடைய பாடசாலைச் சிறுமி ஒருவர் தீவிரமாகக் காயமடைந்ததுடன், தற்போது அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உணவகங்களில் புதிய விலைப்பட்டியல் ; இன்று நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலை அதிகரிப்பு

உணவகங்களில் புதிய விலைப்பட்டியல் ; இன்று நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலை அதிகரிப்பு

மேலதிக விசாரணை

இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொனராகலை திசையிலிருந்து ஒப்பேகொட நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனமும், எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

கொடூர விபத்தில்14 வயது சிறுமியின் கால் அகற்றம் ; சட்டவிரோதமாக கெப் செலுத்திய மாணவன் மீது விசாரணை தீவிரம் | Accident Involving Cab Driven Boy Girl Leg Amputat

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மடுல்ல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலைச் சிறுமியும், அவரது 47 வயதுடைய தந்தையும் படுகாயமடைந்தனர்.

இருவரும் ஆரம்பத்தில் மொனராகலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறுமியின் ஒரு கால் கடுமையாக சேதமடைந்த காரணத்தால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, அவரது தந்தை தொடர்ந்து மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட கெப் வாகனத்தின் சாரதி 17 வயதுடைய பாடசாலை மாணவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் மொனராகலை, மந்துருகெட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிவனொளிபாதமலை சென்ற 322 பேர் கைது

சிவனொளிபாதமலை சென்ற 322 பேர் கைது

மேலும், குறித்த மாணவனிடம் கனரக வாகனங்களை செலுத்துவதற்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லையெனவும், இலகுரக வாகனங்களுக்கான பயிற்சி உரிமம் (Learners Permit) மட்டுமே இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த உரிமத்தின் கீழ் கெப் ரக வாகனத்தைச் செலுத்த சட்டபூர்வ அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெப் வாகனத்தை அதிவேகமாகவும், அலட்சியமாகவும், ஆபத்தான முறையிலும் செலுத்தியதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மாணவன் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் மைனர் என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பேருந்து பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பேருந்து பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US