தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!
தொடருந்து திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக, களனிவெளி (Kelani Valley) பாதையின் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்படவுள்ளதுடன், கோட்டா வீதி (Kota Road) தொடருந்து கடவையும் வாகனப் போக்குவரத்திற்காக முழுமையாக மூடப்படவுள்ளது.
பேஸ்லைன் (Baseline) மற்றும் நாரஹேன்பிட்ட (Narahenpita) தொடருந்து நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள கோட்டா வீதி தொடருந்து கடவையில் இந்த பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணி முதல் மே 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07.30 மணி வரை இந்த தொடருந்து கடவை முழுமையாக மூடப்பட்டிருக்கும்.

இந்த காலப்பகுதியில், களனிவெளி பாதையில் கொழும்பு கோட்டைக்கும் நாரஹேன்பிட்ட தொடருந்து நிலையத்திற்கும் இடையிலான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன. இருப்பினும், பயணிகளின் நலன் கருதி பின்வரும் தொடருந்துகள் மாற்று வழியில் இயக்கப்படவுள்ளன.
மே 23 (சனிக்கிழமை) மாலை - நாரஹேன்பிட்டவிலிருந்து அவிசாவளை வரை
நாரஹேன்பிட்ட தொடருந்து நிலையத்திலிருந்து அவிசாவளை நோக்கி 3 மெதுவான தொடருந்துகள் (Slow Trains) இயக்கப்படும்.
தொடருந்து இலக்கம் 9262 – மாலை 05.00 மணி தொடருந்து இலக்கம் 9264 – மாலை 06.15 மணி தொடருந்து இலக்கம் 9271 – இரவு 08.15 மணி
மே 24 (ஞாயிற்றுக்கிழமை) காலை - அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை
அவிசாவளை தொடருந்து நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி 3 மெதுவான தொடருந்துகள் இயக்கப்படும்.
தொடருந்து இலக்கம் 9649 – காலை 05.15 மணி தொடருந்து இலக்கம் 9641 – காலை 05.55 மணி தொடருந்து இலக்கம் 9651 – காலை 06.25 மணி இந்த அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக தொடருந்து பயணிகள் மற்றும் வீதியைப் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தொடருந்து திணைக்களம் வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.